புதன், 16 மே, 2012

கடவுளை வணங்கவேண்டுமா


கடவுளை வணங்கவேண்டுமா........?
     முதலில் கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
    இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.

வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
     பரிவு.
           கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
          இதற்கு காரணம் அவர்கள் செய்த பாவங்கள் என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
         இதற்கு காரணம் அவர்கள் செய்த  முன்பிறவி விணைகள் . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
      மேலும் எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
    வழிபடுதல்
    வழிபடுதல் என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
   கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.

     58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.

   இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
   மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள பீடைகளூம், கிரகங்களும் நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய் என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
  இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
         nandu_k61@yahoo.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக