சனி, 26 மே, 2012

வாங்க யோசிக்கலாம் 'கடவுள்' எனும் கற்பனையைப் பற்றி..!



இதில்   என்னுடைய சொந்த கருத்துக்களை  பதித்துள்ளேன் .

இவை நாம் சிந்திப்பதற்கே...!


ஒவ்வொரு  மதமும்  ஒரு  கடவுளை  அல்லது  ஒருவரை  கடவுளாக  கொண்டு  செயல்பட்டுவருகிறது. ஏன் ?
முதலில்  நாம்  ஒன்றை  உணர  வேண்டும் . நமது  தலையில்   துப்பாக்கி  வைத்து,  ‘இரண்டாவது  மாடியிலிருந்து  குதி   இல்லை   என்றால்  சுட்டுவிடுவேன்’  என்றால்  நாம்  என்ன  செய்வோம்? ‘குதித்துவிட்டால்  கூட  பிழைத்துவிடலாம்’  என்று  நினைத்து  குதித்துவிடுவோம். அமெரிக்க இரட்டை  மாடி இடிப்பில் இது போல் நடந்தது நமக்கு நினைவிருக்கும்.  
காரணம் என்ன? "மரணபயம்". இது ஒருவனை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும்.

      மதங்கள் யாவும் மனிதனை நெறிப்படுதவே தோற்றுவிக்கப்பட்டன. மனிதர்களுக்கு இடையில் நல்ல எண்ணங்களை வளர்த்து, தீய செயல்களில் அவர்களை ஈடுபடாமல்  தடுக்க  தோற்றுவிக்கப்பட்டன.
ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிதானதாஇல்லையே.
எனவே கடவுள் என்னும் கற்பனையை மதங்களை தோற்றுவித்தவர்கள்  மதங்களில் புகுத்தினர்.
"அவன் ஒப்பற்றவன்","நம்மை படைத்தவன்","நம் நன்மை தீமைகளை கணக்கு வைத்திருப்பான்"
"தீயவர்களை தண்டிப்பான்" என்றெல்லாம் மதங்கள் வழியாக கற்பனைகளை பரப்பினர். மரணபயத்தை ஏற்படுத்தினர் .
     மேற்கண்டவைகளுக்கு எந்த  வித மாற்று கருத்துகளும் கொண்டிராத   சூழலில் மனித  சமூகம்  இருந்ததால் இவற்றை எல்லாம்  நம்பவும்    தொடங்கின.
மனிதர்கள்   எளிதில்  புரிந்துகொள்ள  கடவுளுக்கு உருவம் கொடுக்க எண்ணினர். உயிர்களில் மனித இனம் தான் உயர்ந்தது என எண்ணியிருந்ததால் கடவுளுக்கு மனித உருவமும், மனிதனிலிருந்து உயர்த்திக்காட்ட அதிக கைகள் போன்ற மாற்றங்களும், பயத்தை உண்டாக்க ஆயுதங்களும் தரப்பட்டன.        
  இவைகள் காலப்போக்கில்  அழியக்கூடும் என்பதால் கோவில்கள் கட்டி காலத்தால் அழியாத கற்களில் சிலை செதுக்கி வைத்தனர்.

இந்த மதங்கள் எவ்வாறு பரவின என்று பார்த்தால், அதற்க்கு மன்னர்கள் ஒரு முக்கிய  காரணமாக இருந்தனர் என்று உணரமுடியும். மதங்களின் பிறப்பு கண்டிப்பாக நன்மைகளை உண்டாக்கும் என்று உணர்ந்த மன்னர்கள் அதன் வளர்ச்சிகளுக்கு பெரிதும் வித்திட்டனர். அதை பரம்பரை பரம்பரைகளாக செய்தும் வந்தனர் என்பதற்கு அவர்களின் வரலாறுகளும், அவர்கள் கட்டிய கோவில்களுமே சாட்சி.
நம்மிடம்தான் ஒரு கெட்ட பழக்கம் உள்ளதே. பிரபலமானவர்களும், தலைவர்களும் என்ன செய்தாலும் நாமும் அதை செய்வது.
எனவே மதங்களும்,கடவுள்களும் வேகமாக பரவின.

 “எப்போதும் கடவுளை நினைத்திருந்தால் நன்மைகள் நடக்கும்என்று கூறுவதன் உள்-அர்த்தம் "தவறு செய்தல் கடவுள் தண்டிப்பார் " என்ற பயத்தை ஏற்படுத்தி, அவனை எப்போதும் கட்டுப்படுத்திவைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தான்.
ஆனால்,’கடவுள் தீயவர்களை தண்டிப்பார்என்று அவர்களால் நிரூபிக்க இயலவில்லை.
அதனால்,

    " அரசன் அன்றே கொள்வான்  , தெய்வம் நின்று கொள்ளும்"

என்றனர்.
நல்லவர்களுக்கு துன்பங்கள் ஏற்படும்போது
  "நல்லவர்களை கடவுள் சோதிப்பார், கைவிடமாட்டார்"
என்றனர்.

நல்லவர்களுக்கு பெருந்துயர் உண்டாகும்போது கடவுளை  நிரூபிக்க ,

"இவையெல்லாம் முற்பிறவி வினைகள்"

என்றனர்.
கடவுளுக்கு எதிராக கேள்விகள் எழும்போது

" நம்பினால் மட்டுமே  கடவுளை உணரமுடியும் "

என்று சப்பை கட்டு கட்டி சமாளிக்க முயன்றனர்.

இவ்வாறு கடவுளை காப்பாற்றுகிறான்  மனிதன்.

என்னதான்  மதங்களின் நோக்கம் மனித சமூகத்தை நெறிப்படுத்தஎனினும் , அது  கையாண்ட முறை (மக்களுள் பயத்தை விதைப்பது) தவறானது . இதுவே இதன் வீழ்ச்சிக்கும்  காரணமாகவும்  அமைகிறது.
பிற்காலத்து   சுயநலவாதிகளும், மூடர்களும்   மதங்களை கைப்பற்றி இவற்றின் உன்னத  செயல்பாடுகளை  மூட நம்பிக்கைகளாக மாற்றவிட்டனர்.
மத வெறியையும் , மதகலவரங்களையும்  உண்டாக, மதங்கள் மற்றும் கடவுள்கள்  உருவான  நோக்கங்களை சரியாக புரிந்துகொள்ளததே காரணம் என்று  தற்போது புரிந்துகொள்ள முடிகிறது.



 நன்றி

மாற்று கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக